பிரபல நடிகர் கமலின் ஹேராம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகராக புகழப்படுபவர் நவாசுதின் சித்திக். இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், லன்ச் பாக்ஸ், மண்ட்டோ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்நிலையில் தற்போது நவாசுதின் சித்திக் பலரும் அறியாத ஒரு சம்பவத்தை பற்றி தெரிவித்துள்ளார். ஹேராம் படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், ''நான் பார்த்து வியந்த நடிகர்களில் கமலும் ஒருவர். அப்போது எனக்கு ஹேராம் படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. இதை பார்த்த நான், ஏமாற்றத்தில் தேம்பி தேம்பி அழுதேன். அப்போது கமலின் மகள் ஷ்ருதிதான் எனக்கு ஆறுதல் சொன்னார்.
ஆனால் எனது காட்சி நீக்கப்பட்டது குறித்து எனக்கு வருத்தமேதும் இல்லை. கமலஹாசன் என்பவர் மிகப்பெரிய கலைஞர். அவரின் பெயரை சொல்லுவது கூட., எனக்கு கூச்சமாகதான் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார் நவாசுதின் சித்திக்.