லாக்டவுன் பத்தி நித்தியானந்தாவின் பொன்மொழிகள் ? - பிரபல ஹீரோவின் போஸ்ட் செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு சில தொழில்களுக்கு நிபந்தனையுடன் கூடிய தளர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கான விவரங்களும் வெளியிடப்பட்டன.

Actor Navadeep shares Nithiyananda's quote goes viral | நித்தியானந்தாவின் பெயரில் நடிகர் நவதீப் வெளியிட்ட பதிவு வைரல்

இருப்பினும் பெரும்பாலான வணிகம் சாரந்த செயல்பாடுகள் முடங்கும் நிலையுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. லாக்டவுன் நேரத்தில் பிரபலங்களின் தங்கள் அன்றாட செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகர் நவதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கமாக நித்தியானந்தா பொன்மொழிகள் கூறும் ஸ்டைலில், ''Lock down MAY END or MAY NOT END by MAY END as it MAY EXTEND, but MAY will END by MAY END as it MAY NOT wait for Lock down to END ~ Swamy Nithyananda'' என்று பதிவிட்டிருந்தார்.  அதற்கு இது நித்தியானந்தாவின் பொன்மொழியா? இல்லை உங்களுடையதா? என ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

நடிகர் நவதீப் தமிழில் 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். தல அஜித்துடன் 'ஏகன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அவர், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்திருந்த 'அல வைக்குந்தபுரம்லோ' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Navadeep shares Nithiyananda's quote goes viral | நித்தியானந்தாவின் பெயரில் நடிகர் நவதீப் வெளியிட்ட பதிவு வைரல்

People looking for online information on Lockdown, Navdeep, Nithyananda will find this news story useful.