தனது மகனுக்கு பெயர் சூட்டி குடும்ப PHOTO-வை வெளியிட்ட நரேன்.. குழந்தை பெயர் என்னனு பாருங்க 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நரேன் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர்.

Advertising
>
Advertising

Also Read | யோகி பாபு மகனின் பிறந்தநாள் விழா.. நேரில் வாழ்த்திய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம் கைதி, விக்ரம் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் "For the people", பழம் பெரும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நிழல் குத்து, கிளாஸ் மேட் ஆகிய பல படங்களில் நரேன் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய LCU படங்களான கைதி & விக்ரம் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நரேன், கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தன்மையா என்ற மகள் 2008 ஆம் ஆண்டு பிறந்தார். சிலநாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நரேன் அறிவித்தார்.

நடிகர் நரேன் & மஞ்சு தம்பதியருக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நரேன், தனக்கு குழந்தை பிறந்த தகவலை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் குழந்தைக்கு, நரேன் - மஞ்சு தம்பதியர் ஓம்கார் என பெயரிட்டுள்ளனர். மேலும் தங்களது மகள் தன்மயா & குழந்தை ஓம்கார் உடன் இணைந்து குடும்ப போட்டோவையும் நரேன் பகிர்ந்துள்ளார். மேலும் குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Also Read | "2023-ல் இன்னும்".. விலையுயர்ந்த Harley Davidson பைக்கில் நடிகை கனிகா.. அவரே பகிர்ந்த ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Narain Revealed His Son Name is Omkaar Narain

People looking for online information on Narain, Narain Revealed His Son Name, Omkaar Narain will find this news story useful.