நடிகர் நகுல்-ன் மனைவி சொன்ன எமோஷனல் தகவல்.. ''பிரசவத்திற்கு முன் எடுத்த முக்கிய முடிவு..!"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நகுலின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமின்றி நகுல் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக அசத்தி வருகிறார். இதனிடையே அண்மையில் நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் பெண் குழந்தை பிறந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் பெண் குழந்தைக்கு அகிரா என அவர்கள் பெயர் சூட்டினர். 

இந்நிலையில் தற்போது நகுலின் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான தகவலை தெரிவித்துள்ளார். தனது பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும், பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் அப்போது எடுக்கப்பட்ட உணர்ச்சிமிகுந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இவர் பதிவுக்கு ரசிகர்களின் வரவேற்பு குவிந்து வருகிறது. 

 

நடிகர் நகுல்-ன் மனைவி சொன்ன எமோஷனல் தகவல்.. ''பிரசவத்திற்கு முன் எடுத்த முக்கிய முடிவு..!" வீடியோ

நடிகர் நகுலின் மனைவி எமோஷனல் | Actor Nakkhul's wife emotional post about her pregnancy

People looking for online information on Nakkhu Wife, Nakkhul, Nakul will find this news story useful.