WOW.. பிரபல ஹீரோ சொன்ன குட் நியூஸ்..! - 'சீக்கீரமே குட்டி பாப்பா COMING.!!'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நகுல். இவர் நடித்த காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடிவராக பங்கேற்று வருகிறார். 

இந்நிலையில் நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''எனது இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

பிரபல நடிகரின் மனைவி கர்ப்பமாகியிருக்கும் தகவல் வெளியிட்டார் | actor nakkhul shares goodnews that his wife is pregnant

People looking for online information on Nakul, Nakul Wife Pregnent will find this news story useful.