பிரபல நடிகருடன் இந்த பிக்பாஸ்-4 ஷூட்டிங் ஆரம்பமானதா.?! - இணையத்தில் வைரல் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம், இணையத்தில் பிக்பாஸ்-4 நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ - பிக்பாஸ். 100 நாட்கள் ஒற்றை வீட்டுக்குள் பிரபலங்களுடன் நடக்கும் இந்த ஷோ ரசிகர்களை கவர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் அடியெடுத்து வைத்து கொண்டிருக்கிறது. இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அன்மையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான லோகோவும் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை அவர் பதிவிட, இந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4-க்கான ப்ரொமோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது எனவும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது சீக்கிரமே தமிழுக்கான அறிவிப்பு வரலாம் என நெட்டிசன்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள் சோஷியல் மீடியாக்களில்.! 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் தொகுப்பாளரின் லேட்டஸ் புகைப்படம் வைரல் | actor nagarjuna's latest photo goes viral and expects for biggboss 4

People looking for online information on Akkineni Nagarjuna, BiggBoss 4, Kamal Haasan will find this news story useful.