ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் முடக்கம்! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழிசையில் ஒரு புதிய புரட்சியை செய்தார்.

இண்டிபெண்டண்ட் இசை மரபை தமிழில் மீண்டும் புதிய வடிவத்தில் தொடங்கி வைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பல முக்கிய பாடல்களுக்கு ரசிகர்கள் ஏராளமாய் உள்ளனர். தொடர்ந்து ஆதியின் குறிப்பிட்ட சில பாடல்களை மட்டுமே ஆன் ரிப்பீட் மோடில் போட்டு கேட்கும் தீவிர ரசிகர்களும் அவரது பாடல்களுக்கு உண்டு.

தொடர்ந்து தமிழில் ‘ஆம்பள’, ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஆதி, 2017ஆம் ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள ஆதி, தற்போது 'சிவகுமாரின் சபதம்' என்கிற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிப் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் தான், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேனலில் இருந்த ஏராளமான பாடல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியும் நிலையில், சேனலில் பெயரும் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆதியின் ரசிகர்கள் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர்.

Actor musician Hip Hop Tamizha Adhi youtube channel hacked

People looking for online information on Hip Hop Tamizha Adhi will find this news story useful.