தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், அதே ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.
இதற்கென தமிழகம் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் தான் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு தொடங்கப்பட்டு தற்போது பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2வது இடத்தை வகித்து வருகிறது. இதனிடையே சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுளார். இந்நிலையில், இன்று நண்பகல் நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 100க்கும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இவருடன் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரபல திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 11,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இந்த தொகிதியில் கள நிலவரப்படி முன்னிலை வகிக்கிறார். அத்துடன் அதிமுக வேட்பாளர் வி.என். ரவி 8,500க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ALSO READ: பின்னடைவை சந்திக்கிறாரா? நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா! எந்த தொகுதி? யார் யார் போட்டி?