மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தின் மிரட்டலான FIRST LOOK POSTER!!! படத்துக்கு பேரு என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார்.

முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உடன் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த நாட்டாமை, முகவரி படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தன. விழா எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து இருந்தார். அந்தப் படத்தில் மகேந்திரனின் உடல் மொழிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் மகேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்தின் முதல்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்திற்கு "அர்த்தம்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் அர்த்தம் டைட்டில் சங்கிலியாலும் தூக்கு கயிற்றாலும் கட்டப்பட்டு இருக்கிறது. தூக்கு கயிறுக்கு நடுவிலும், தலைப்பின் முதல் எழுத்தான 'அ' விலும்  6 மணியை கடிகாரம் காட்டுகிறது.

 

ராதிகா  சீனிவாஸ் தயாரிப்பில், ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையில், இந்தப் படத்தை இயக்குனர் மணிகண்டன் தலகுட்டி இயக்குகிறார். நடிகர் நந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா தாஸ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. 

Actor master mahendran actor nandha movie fl poster

People looking for online information on Master Mahendran, Nandha Durairaj will find this news story useful.