பிரபல நடிகர் தியேட்டர்களின் திறப்பு மற்றும் டாஸ்மாக் கடைகளின் மூடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவில் எதிரொலிக்க தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு., தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனிடையே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இவ்விவகாரம் குறித்து வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''டாஸ்மாக் கடைகளை போல ஏன் தியேட்டர்களை திறக்க மறுக்கிறீர்கள்.? தியேட்டர்களை திறக்க வேண்டும். அது ஒன்றே மக்களின் பொழுதுபோக்காக உள்ளது. ஒன்று தியேட்டர்கள் திறந்துவிடுங்கள், அல்லது அனைத்து டாஸ்மாக்கையும் மூடுங்கள். இல்லாவிட்டால் போராட்டம் நடக்கும்'' என அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் OTT-ல் படங்கள் வெளியாவது பற்றி பேசிய அவர், ''OTT-ல் ஏன் பெரிய ஹீரோக்களின் படங்களை மற்றும் வெளியிடுகிறார்கள். பல சின்ன படங்கள் தயாராக இருக்கின்றன. அதை வாங்கி OTT நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இல்லையென்றால்., OTT-யே வேண்டாம். சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.