அட..! நம்ம தளபதி விஜய்க்கு.., சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கொடுத்த CHALLENGE.!! - விஷயம் என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யை டேக் செய்து ஒரு சவாலை விடுத்துள்ளார். 

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. மேலும் இவர் தனக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இதனிடையே நேற்று மகேஷ் பாபு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதை தொடர்ந்து மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்ந்தனர். 

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு ஒரு சவால் விடுத்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிறிய மரக்கன்றை நடும் வீடியோவை பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, ''இதை விட சிறப்பாக ஒரு பிறந்தநாளை கொண்டாட முடியாது. இந்த #GreenIndiaChallenge-ஐ நான் நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நடிகை ஷ்ருதி ஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இதை ஒவ்வொருவரும் பகிர்ந்து, நல்ல சூழல் கொண்ட பசுமையான உலகத்துக்கு வித்திடுவோம்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய்க்கு மகேஷ் பாபு சவால் | Actor Mahesh Babu gives a challenge to Master actor Vijay

People looking for online information on Mahesh Babu, Master, Vijay will find this news story useful.