அட.! ''இதுதான் நான் பப்ளிக் எக்சாமில் வாங்கிய மார்க்.!! - மாதவன் வெளியிட்ட WOW தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் தனது பப்ளிக் எக்சாமில் எடுத்த மதிப்பெண் குறித்து பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஆல் டைம் சாக்லேட் பாய்-ஆக கொண்டாடப்படுபவர் மாதவன். இவர் நடித்த அலைபாயுதே, மின்னலே, ரன் உள்ளிட்ட படங்களை இன்றும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இவர் தற்போது நம்பி விளைவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். 

இதனிடையே இன்று 12-ஆம் வகுப்பின் போர்ட் எக்சாம் ரிசல்ட் வெளியானது. இதையடுத்து மாதவன் மாணவர்களை ஊக்கப்படுத்த தனது மதிப்பெண் குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''இந்த போர்ட் எக்சாமில் நினைத்தபடி நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு நான் சொல்வது, எனது போர்ட் எக்சாமில் நான் எடுத்தது வெறும் 58 % தான். அதனால் இனிமேல்தான் ஆட்டமே ஆரம்பமாகிறது என் இனிய நண்பர்களே'' என உற்சாகப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து மாதவனின் பதிவுக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

மாதவன் தனது பப்ளிக் எக்சாம் மார்க்கை வெளியிட்டார் | actor madhavan shares his board exam mark ad results came out today

People looking for online information on Board Exam, Madhavan, Nambi Effect will find this news story useful.