நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | பிரபல ராப் கலைஞரோடு இணைந்த மாளவிகா மோகனன்… முதல் முறையாக… Exciting தகவல்
ராக்கெட்ரி…
2017 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்! (Rocketry - The Nambi Effect) எனும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினார் நடிகர் மாதவன். கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
படப்பிடிப்பு
2019 ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்குகிறார். இது அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும். இந்த படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் என நான்கு மொழிகளில் உருவாகிறது. மலையாளம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் வேளையில் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.
கேன்ஸ் விழாவில்….
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. அங்கு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. படத்தின் பிரிமீயருக்காக மாதவன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுபோலவே அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் படத்தின் டிரைலரை மாதவன் வெளியிட்டார். அது சம்மந்தமான காட்சிகளும் இணையத்தில் வைரலாகின.
ரிலீஸ் தேதி…
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஏற்கனவே சில முறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் மாதவன் ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார். மேலும் அவருடைய பதிவில் “ ஒரு நொடியில் வில்லனாக்கப்பட்ட சிறந்த அறிவியல் அறிஞரும், தேச பகதருமான ஒருவரின் கதை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | சிவாங்கியோடு சேர்ந்து மேடையில் கலக்கிய CWC புகழ்… இவ்ளோ நல்லா பாடுவாரா?.... viral வீடியோ