“சார் ONE MORE-லாம் கேக்கலாமா?...” - உலகநாயகனின் ரியாக்ஷன் என்ன –லோகேஷ் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘மாமனிதன்’ ரிலீஸில் மாற்றம்… விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய தேதி! Viral pic

விக்ரம் எதிர்பார்ப்பு…

கமல்ஹாசன் நடிப்பில்  விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசியது வரவேற்பைப் பெற்றது.

லோகேஷ் exclusive

இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள நேர்காணலில் படம் பற்றியும் கமல்ஹாசனுடன் பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக படப்பிடிப்பின் போது கமலிடம் ஒன்மோர் நடிக்கக் கேட்டது குறித்து பேசியுள்ளார். அவரது பேச்சில் “நான் முதலில் தயங்கி தயங்கிதான் கமல் சாரிடம் போய் கேட்டேன்.   ‘சார் one more- லாம் கேக்கலாமா? எப்படி உங்கள்ட்ட கேக்குறது சார்’ என்று கேட்டேன். அதற்கு அவர் மிகவும் சாதாரணமாக ‘ஆமா நல்ல வர்ற வர கேட்டுதான ஆகணும். உனக்கு ஓகே ஆகுற வர கேளு’ எனக் கூறினார்.

ஆனால் அதறகாக நாங்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் உலகநாயகன். அதனால் நாங்கள் அவரின் வார்த்தைகளை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டோம். ஒரே ஒரு காட்சி மட்டும் 12 தடவை ஒன் மோர் சென்றது. அதை மட்டும் நான் பர்சனலாக எண்ணி வைத்துக் கொண்டேன்.” எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

“சார் ONE MORE-லாம் கேக்கலாமா?...” - உலகநாயகனின் ரியாக்ஷன் என்ன –லோகேஷ் EXCLUSIVE வீடியோ

Actor lokesh kanaganaraj exclusive interview about vikram

People looking for online information on Lokesh kanaganaraj, Lokesh kanaganaraj exclusive interview, Vikram Movie will find this news story useful.