நடிகர் கார்த்தியின் FACEBOOK PAGE... கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக நடிகர் கார்த்தி ட்வீட் செய்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Actor Karthi Tweeted about his Facebook Page Hacked
Advertising
>
Advertising

Also Read | டிராக்டர் மோதி சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல டிவி நடிகை..? சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம்வருபவர் கார்த்தி. தமிழில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். அண்மையில் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படத்தில் கிராமத்து இளைஞராக நடித்து இருந்தார் கார்த்தி.

Actor Karthi Tweeted about his Facebook Page Hacked

அதை தொடர்ந்து வெளியான இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் -1ல் நடித்திருந்தார் கார்த்தி. வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் தோன்றிய கார்த்தியின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் படமும் இவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்திருந்தது. தற்போது இயக்குனர் ராஜூமுருகனுடன் கைகோர்த்திருக்கிறார் கார்த்தி. இந்த படத்திற்கு 'ஜப்பான்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கார்த்தியின் 25-வது படமான ஜப்பானை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், கார்த்தி தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக ட்வீட் செய்திருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"என்னுடைய பேஸ்புக் பேஜ் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. பேஸ்புக் குழுவுடன் இணைந்து அதனை மீட்க முயன்று வருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை 3.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னுடைய பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக கார்த்தி தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Also Read | LOVE TODAY பார்த்துட்டு சிம்பு அனுப்பிய வாழ்த்து.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதீப்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi Tweeted about his Facebook Page Hacked

People looking for online information on Karthi, Karthi Tweet will find this news story useful.