"நடுராத்திரி சம்மர்சால்ட் அடிக்கவிட்டியே மன்னிக்கவேமாட்டேன்"-BIGGBOSS பிரபலம் பற்றி கார்த்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறி தனது 4 மாத குழந்தையின் CUTE போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்!

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் கார்த்தி மற்றும் விருமன் படக்குழு & திரை பிரபலங்கள் விருமன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.‌

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.‌ இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. அதில் வினியோகஸ்தர் சக்தி பிலீம் பேக்டரி சக்தி வேல் நடிகர் சூர்யா, கார்த்தி,  மற்றும் கற்பூர ராஜசேகர பாண்டியன் ஆகியோருக்கு வைர Bracelet-ஐ பரிசளித்தார். இயக்குனர் முத்தையாவுக்கு வைர மோதிரம் பரிசளித்தார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண்  மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் 'வானம் கிடுகிடுங்க' பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பகிர்ந்து "நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர், மன்னிக்கவேமாட்டேன். இதற்கு முன் இப்படி செய்ததே இல்லை 😊. இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் யுவன் சங்கர் ராஜா 🔥" என கூறியுள்ளார்.‌

இந்த பாடலுக்கு நடனம் அமைத்த சாண்டி மாஸ்டரை டேக் செய்து நடிகர் கார்த்தி இப்பதிவை பதிவிட்டுள்ளார். சாண்டி மாஸ்டர் 2019 ஆம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 3ல் இறுதி போட்டியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல OTT-க்காக தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. போட்டோவுடன் வெளியான தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi about Viruman Choreographer Sandy Master

People looking for online information on Karthi, Viruman, Viruman Choreographer, Viruman Choreographer Sandy Master will find this news story useful.