"அஜித் சார் திரும்ப திரும்ப சிவா கூட படம் பண்ண இதான் காரணம்"! நடிகர் கார்த்தி சொன்ன EXCLUSIVE தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் ஹீரோவாக கார்த்தி நடிக்கும் 'விருமன்'படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Actor Karthi about Director Siruthai Siva and Ajithkumar
Advertising
>
Advertising

இதற்கான பல நிகழ்வுகளில் கார்த்தி சமீபத்தில் கலந்து கொண்டார். மேலும் கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் ஆவதையொட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான நிகழ்ச்சியில் (Karthi Fans Festival) நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

Actor Karthi about Director Siruthai Siva and Ajithkumar

கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் ஆவதையொட்டி கார்த்தி பணியாற்றிய இயக்குனர்களில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் வீடியோ வழியாக தோன்றி நடிகர் கார்த்தியை வாழ்த்தினர். சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் பணிபுரிந்த அனுபவங்களை சிவா பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது நடிகர் கார்த்தி இயக்குனர் சிவா குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் "சிவா பயங்கர ஸ்வீட்.. அன்புனா கொஞ்ச நஞ்ச அன்பு இல்ல..‌அவ்வளோ அன்பான ஒருத்தர். சிவா ஒரு நடிகரை  இயக்குனா நடிகரோட நம்பிக்கை 200 சதவீதமா இருக்கும். ராக்கெட் ராஜா கதாபாத்திரம் நல்லா வந்ததுக்கு சிவா தான் காரணம். அந்த அளவுக்கு ஊக்கம் கொடுப்பார். சினிமாவை அளவுகடந்து நேசிக்கும் நபர் சிவா. அஜித் சார் திரும்ப திரும்ப சிறுத்தை சிவா கூட படம் பன்றார்னா ஒரு இயக்குனரா சிவாவை எவ்வளவு பிடிச்சுருக்கனும்.. உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர் சிவா" என கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அஜித் சார் திரும்ப திரும்ப சிவா கூட படம் பண்ண இதான் காரணம்"! நடிகர் கார்த்தி சொன்ன EXCLUSIVE தகவல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi about Director Siruthai Siva and Ajithkumar

People looking for online information on Ajith Kumar, Karthi, Siruthai Siva, Siva, Suriya, Vedalam, Veeram, Viswasam will find this news story useful.