நடிகர் கமல் வெளியிட்ட., கலங்க வைக்கும் இரங்கல் பதிவு. ''ஒரு கலங்கரை விளக்கம் அவர்..!".

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த தியேட்டர் இயக்குநருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்திய அளவில் புகழ்ப்பெற்ற தியேட்டர் ட்ராமக்களின் இயக்குநராகவும், நடிப்பு பயிற்சியாளருமாகவும் இருந்தவர் இப்ராஹிம் அல்காசி. டெல்லியில் அமைந்துள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் இவரிடம் நடிப்பு பயிற்சி பெற்று, இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் பலர். இதனிடையே தனது 94-வது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக, இவர் இயற்கை எய்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்ராஹிம் அல்காசிக்கான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''இந்திய தியேட்டர் ட்ராமக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து, பல நல்ல நடிகர்களுக்கு குருவாக இருந்த இப்ராஹிம் அல்காசி, தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுவார். ட்ராமாக்கள் மற்றும் கலை மீது அவருக்கு இருந்த காதல் மிகப்பெரியது. அவரது குடும்பத்தினருக்கு என இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு நடிகர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் கமல் இரங்கல் பதிவு | Actor Kamal Mourns for the Demise of Popular Theatre Director and Mentor

People looking for online information on Ebrahim Alkazi, Kamal Haasan, National School of Drama will find this news story useful.