நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரப்படுத்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
Also Read | 'ஓ சொல்றியா மாமா' & 'அரபிக்குத்து' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய சன்னி லியோன்! வேறலெவல் VIDEO
தமிழகத்தின் மிக முக்கிய நடிகராக வலம்வருபவர் கமல்ஹாசன். நடிப்பு, இயக்கம், பாடல் ஆசிரியர், நடன இயக்குனர் என பன்முக திறமையின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள கமல்ஹாசன் சிறந்த படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதையும் வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கும் கமல்ஹாசனை உலக நாயகன் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோல்டன் விசா
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த 2019 ஆம் ஆண்டு கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் கலை, அறிவியல், முதலீடு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கோல்டன் விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக, R .பார்த்திபன், விஜய் சேதுபதி, த்ரிஷா மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், ஜெயசூர்யா மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் இருந்து, ஷாருக்கான், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜாவேத் அக்தர் மற்றும் ஷபானா ஆஸ்மி ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
விக்ரம்
அண்மையில் வெளிவந்து மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார் கமல்ஹாசன். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அனிருத் இசைமைக்க, லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். ஜூன் 3 ஆம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் சாய் பல்லவி நடித்த புதிய படம்.. வெளியான வேற லெவல் போட்டோஸ்