உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா நோய் தொ ற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி வரை தனிமையில் இருக்கும் படி உத்தரவு இடப்பட்டது. மேலும் அவரது வீட்டின் முன்பு "நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டோம்" என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்தச் செய்தி பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது மக்கள் நீதி மையத்தை ஒடுக்கும் செயல் அன்று கட்சியினர் கொந்தளித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு இருந்த ஸ்டிக்கர்கள் மாநகராட்சியால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தி அக்கட்சியினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கிறது. அதேப் போல் பிரதமர் மோடியின் 21 நாள் ஊரடங்கால் ஏழை எளிய பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் நடிகர் கமல் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது பற்றி நடிகர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். "அதில் நான் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றனர். ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள எனது ஆழ்வார்பேட்டை வீடு எனது கட்சி அலுவலகமாக செயல் பட்டு வருகிறது. இது எனக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். எனவே அந்த இடத்தில் நாங்கள் யாரும் இல்லை என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நானும் எனது குடும்பத்தினரும் இரண்டு வாரமாக தனிமையில் தான் இருக்கிறோம் என்பதை அன்புள்ளோருக்கு கூறி கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.