தளபதி 67 படத்தில் கலையரசன்? லோகேஷூடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ்.

Actor Kalaiyarasan about Thalapathy 67 and Lokesh
Advertising
>
Advertising

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

Actor Kalaiyarasan about Thalapathy 67 and Lokesh

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' பிளாக்பாஸ்டர் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 03 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் தான் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.

இது பற்றி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கூட கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில், நடிகர் கலையரசனும் லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் "நான் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை என லோகேஷ் கூறிவிட்டார். ஆனால் LCU வில் இருப்பேன்" என கலையரசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Kalaiyarasan about Thalapathy 67 and Lokesh

People looking for online information on Kalaiyarasan, Thalapathy67 will find this news story useful.