"ஜெய்" இசையமைத்து நடிக்கும் சுசீந்திரனின் திரைப்படம்!.. செம்ம ஜோராக வெளியான MOTION POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லெண்டி ஸ்டுடியோஸ் சார்பில் S.ஐஸ்வர்யா தயாரிக்கும் புதிய திரைப்படம் சிவசிவா. இயக்குநர் சுசீந்திரன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். M.காசி விஸ்வநாதன் படத்தை தொகுத்துள்ளார். 

இந்த படத்தில் தான், நடிகர் ஜெய் நாயகனாக நடித்திருப்பது மட்டுமின்றி, இசையமைத்தும் இருக்கின்றார். ஆம், நடிகராக அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஜெய், இப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். நடிகர் ஜெய், தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில், நடிகராக அறிமுகமானார். தற்போது ஜெய் இசையமைத்து நடிக்கும் இந்த படம், ஜெய்யின் 30-வது படம். அதே சமயம் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ஜெய் இணையும் முதல் திரைப்படம் இது.

இந்த சிவசிவா படத்திற்கான பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் ஏகாதசி எழுத, ஷோபி பவுல்ராஜ் நடனப் பணிகளையும், தினேஷ் காசி சண்டை பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

சிவசிவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் சிம்பு நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். சிம்பு தன் உடல் எடையை குறைத்து இந்த படத்தில் ஜோராகவும் மாஸாகவும் தோன்றியதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகினர்.

இந்த நிலையில் நடிகராக மட்டுமே நாம் பார்த்து வந்த ஜெய், தற்போது இசைக்கலைஞராகவும் புதிய பரிமாணத்தில் சுசீந்திரனின் இந்த ‘சிவ சிவா’ படத்தில் தோன்றுவது என்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

Also Read: "நம்மள்ட்ட இருக்குற 2-மே சொகுசு Car தான்".. "வெளில அப்டி சொல்லாத" மனைவிக்கு PUBG மதன் அட்வைஸ்!

Actor Jai music composed starring siva sivaa motion poster

People looking for online information on Jai, SivaSivaa, Suseenthiran will find this news story useful.