பள்ளி மாணவர்களுடன் வீடியோ காலில் முக்கியமான விஷயத்தை பேசிய ஹிப்ஹாப் ஆதி.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹிப்ஹாப் ஆதி மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்தது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு #தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்'' என பதிவிட்டுள்ளார். ஹிப்ஹாப் ஆதியின் இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

பள்ளி மாணவர்களுடன் வீடியோ காலில் பேசிய ஹிப்ஹாப் ஆதி | actor hiphop aadhi speaks to school students over video call

People looking for online information on Hip Hop Tamizha Adhi, Tamizhi will find this news story useful.