வாவ்.. CWC புகழோட நடிக்குறத பத்தி.. பிரபல இளம் நடிகர் என்ன சொல்லிருக்காரு பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கௌதம் கார்த்திக் புகழுடன் புதிய படத்தில் நடிப்பதைப் பற்றிய தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

ஜலபுலஜங்கு பாட்டு செஞ்ச சாதனை…. சிவகார்த்திகேயன் பகிர்ந்த சர்ப்ரைஸ் வீடியோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றி

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து மூன்று சீசன்களாக வெற்றிநடை போட்டு வரும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. அதிலும் சீசன் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த சீசனின் அஷ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகள்வில் பகிரப்பட்டன.

சினிமாவில் கால்பதித்த புகழ்

அந்த மூவரில் அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் மூலம் திரைத்துறையில் ஹீரோவாகிவிட்டார். சிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலமாக அறிமுகமாகிறார். அதுபோலவே புகழ் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் சூர்யா ஆகியோரோரு நடித்த வலிமை  மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் கடந்த அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்த படங்களில் அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து புகழ்  விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள பெரிய நட்சத்திரங்களின் படங்களான யானை, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

மீண்டும் ரசிகர்களுக்காக

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அவர் முதலில் போட்டியாளராகக் கலந்துகொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணுவதாக பேசப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது வருகை தருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

புகழைப் புகழ்ந்த இளம் நடிகர்

இப்போது ஏராளமான படங்களில் நடித்து வரும் புகழ் நடிகர் கௌதம் கார்த்திக்கோடு ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது புகழோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள கௌதம் கார்த்திக் அதில் ‘அருமையான மனிதரும் கலகலப்பானவருமான விஜய் டிவி புகழோடு எனது புதிய படத்தில் நடிப்பது அலாதியான அனுபவம்’ எனக் கூறியுள்ளார். 

ஊரில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து கார் மெக்கானிக்காக சில வருடங்கள் வேலை செய்து பின்னர் கிடைத்த சிறு சிறு வேடங்களைப் பயன்படுத்தி இப்போது சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக புகழ் வலம் வருகிறார். இப்போது வரிசையாக அவர் படங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

”கடைசியா எப்ப அத செஞ்சீங்க, ஞாபகம் இருக்கா?” ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டேட்டஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor gautham karthik talked about working with CWC pugazh

People looking for online information on Actor gautham karthik, குக் வித் கோமாளி, கௌதம் கார்த்திக், புகழ், CWC, CWC pugazh will find this news story useful.