விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்கும் 'பிக்பாஸ்' பிரபலம்.. அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக, நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்த விஜய், அடுத்ததாக இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | '"கபாலி கமர்சியலா பெரிய ஹிட்டு".. "மன உளைச்சல்ல இருந்தேன்".. மனம் திறந்த பா. ரஞ்சித்!

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகின்றது. மேலும், இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர்.

வாரிசு படத்திற்கு, எஸ் தமன் இசையமைத்து வருகிறார். விஜய் படத்துக்கு அவர் இசையமைப்பது இது தான் முதல் முறை. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, கே எல் பிரவீன் படத் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக தெலங்கானா உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் கணேஷ் வெங்கட்ராம், புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேக்கப் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்த கணேஷ் வெங்கட்ராம், வாரிசு படத்தின் செட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பெரிய அறிவிப்புக்காக காத்திருங்கள் என வீடியோவில் குறிப்பிட்டுள்ள கணேஷ், தனது கேப்ஷனில், "வாரிசு படத்தில் விஜய் சாருடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி. இது மேக்கப் நேரம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய அறிவிப்புக்காக காத்திருங்கள் என கணேஷ் வெங்கட்ராம் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ள விஷயம், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | ஹீரோவாகும் அரபிக் குத்து 'புகழ்' ஜானி மாஸ்டர்.. வைரலாகும் பூஜை ஃபோட்டோஸ்!!

தொடர்புடைய இணைப்புகள்

Actor ganesh venkatram in the sets of vijay next movie varisu

People looking for online information on Bigg Boss Ganesh Venkatram, Ganesh Venkatram, Ganesh Venkatram in Varisu Movie, Varisu, Vijay will find this news story useful.