AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. அஜித் போட்டோவுடன் வெளியான செம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | சென்னையில் அஜித் நடிக்கும் 'AK 61' படத்தின் படப்பிடிப்பு.. ரசிகர்களுடன் H. வினோத் & TEAM! வைரல் போட்டோ!

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் GM சுந்தர், AK 61 படத்தின் படப்பிடிப்பில் அஜித் உடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அஜித் உடன் சுந்தர் ஐதராபாத் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த  புகைப்படம் மூலம் இது உறுதி ஆகியுள்ளது. நடிகர் அஜித் படத்தில் இரண்டாவது முறையாக G.M. சுந்தர் நடிக்கிறார்.

சுந்தர், சார்பட்டா பரம்பரை படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்தவர். GM சுந்தர், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக ஐஜி வேடத்தில் அரசு கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இவர் ஏற்கனவே மண்டேலா, காதலும் கடந்து போகும் , மகாமுனி, சீதகாதி உள்ளிட்ட சமீப படங்களிலும், 80 களில் புன்னகை மன்னன், சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | கார்த்தி நடிக்கும் "சர்தார்".. கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! முழு விபரம்

தொடர்புடைய இணைப்புகள்

Actor G M Sundar with Ajith Kumar AK 61 Movie Shooting Image

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, AK 61 Movie Shooting Image, G M Sundar, H Vinoth will find this news story useful.