நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான சார் திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "மயில்சாமியின் கடைசி வாய்ஸ்.. அப்போவே பிரச்சனை வந்திடுச்சு".. Drums சிவமணி கண்ணீர் பேட்டி..!
நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள தமிழ் - தெலுங்கு இருமொழி திரைப்படம் 'வாத்தி'.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படம் தெலுங்கில் சார் (Sir) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
கல்வித் துறையை அடிப்படையாக கொண்ட இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் பணிபுரிந்துள்ளனர்.இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி தமிழில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியது. தொடர்ந்து இந்தப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் தெலுங்கில் சார் படம் வெளியாகி மூன்று நாட்களில் நடிகர் தனுஷிற்கு கிடைத்த ஷேர் 8.5 கோடி ரூபாய் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தனுஷிற்கு கிடைத்த அதிகபட்ச ஷேர் இது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Also Read | "கடைசில அவன் சொன்னது மாதிரியே நடந்துடுச்சு".. மயில்சாமி பற்றி உருக்கமாக பேசிய தாமு..!