DADA பாத்துட்டு போன் பண்ணிய தனுஷ்.. கவின் பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படம் குறித்து நடிகர் தனுஷ் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது குறித்து நடிகர் கவின்  நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அயலி டைரக்டர் மேல எனக்கு வருத்தம் தான்".. பிரபல நடிகர் TSR ஸ்ரீனிவாசன் ஷேரிங்ஸ்!!

கவின் நடிப்பில் ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் கவின் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம் கவின், தனுஷ் பேசுறேன்... நான் (கவின்) என் காதில் கேட்டதெல்லாம் உண்மையா என என் மனம் சில நொடிகளை அசை போட்டிருக்க வேண்டும். நிஜம் என்னவென்றால், நான் இன்னும் அந்த ஃப்ளாஷிலிருந்து வெளியே வரவில்லை‌. இதோ இப்போது நான் தட்டச்சு செய்கிறேன்...

Images are subject to © copyright to their respective owners.

தாதாவைப் பார்த்துவிட்டு தனுஷ் சாரிடம் இருந்து அழைப்பைப் பெறுவது உண்மையில் ஒரு அதிசயமான தருணம். உங்கள் எல்லா திரைப்படங்களையும் திரையில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களின் சிறந்த திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். இன்று, உங்களிடமிருந்து ஒரு அழைப்பைப் பெறுவதை ஒரு எளிய நன்றியால் சுருக்கி விட முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டியதற்காக உங்கள் மீதான மரியாதை அதிகமாகி உள்ளது சார் .
வாத்தி படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & உங்களிடமிருந்து சிறந்த சினிமாவைப் பார்க்க எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்!" என தனுஷ் அழைப்பு குறித்து கவின் அந்த அறிக்கையில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read | FARZI -ல் விஜய் சேதுபதிக்கு டப்பிங் பேசிய TSK.. நேரில் அழைத்து VJS தந்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சியான பதிவு

DADA பாத்துட்டு போன் பண்ணிய தனுஷ்.. கவின் பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்..!! வீடியோ

Tags : Dhanush, Kavin, Dada

தொடர்புடைய இணைப்புகள்

Actor Dhanush Phone Call to Kavin after watching Dada

People looking for online information on Dada, Dhanush, Kavin will find this news story useful.