அவென்ஜர்ஸ் டீமுடன் ஹாலிவுட் திரைப்படம்.. 'ACTION - PACKED சம்பவம்.!!' - மனம் திறக்கும் தனுஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

ஹாலிவுட் படம் பற்றி தனுஷ் அறிக்கை | actor dhanush official statement on joining with avengers team

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து கார்த்திக் நரேன் மற்றும் மித்ரன் ஜவகர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார். 

ஹாலிவுட் படம் பற்றி தனுஷ் அறிக்கை | actor dhanush official statement on joining with avengers team

இதற்கிடையில் தனுஷ் ஹிந்தியில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து அத்ரங்கி ரே திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார். டெல்லியில் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று வந்தது. 

ஹாலிவுட் படம் பற்றி தனுஷ் அறிக்கை | actor dhanush official statement on joining with avengers team

இந்நிலையில் தற்போது அடுத்ததாக தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. The Gray Man என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அவென்ஜர்ஸ் திரைப்படத்தை இயக்கிய ருஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். மேலும் ஹாலிவுட் பிரபலங்களாகிய ரியான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''The Grayman படக்குழுவுடன் இணைவது குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப்படி ஒரு ஆக்‌ஷன் பேக்கடு அனுபவத்தில் ஒரு பங்காக இருப்பது குறித்து ஆவலாக இருக்கிறேன். எனக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்துவரும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி'' என அவர் தெரிவித்துள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஹாலிவுட் படம் பற்றி தனுஷ் அறிக்கை | actor dhanush official statement on joining with avengers team

People looking for online information on Avengers Endgame, Dhanush, Ryan gosling, The Grayman will find this news story useful.