நடிகர் தனுஷ் தனது செல்ல நாய்களோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக அறியப்பட்ட தனுஷ் இப்போது தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக் கிழமை (மார்ச் 11) டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது.. இந்த திரைப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் இப்போது நடந்து வருகின்றன.
மற்ற மொழி படங்களில் கவனம்
தனுஷ் தெலுங்கு மற்றும் தமிழில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பலான இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் நேரடி முதல் தெலுங்கு படமாக வாத்தி அமைந்துள்ளது. இதையடுத்து அவர் மற்றொரு தெலுங்கு படமாக சேகர் கமுலா இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். அதுதவிர ஹாலிவுட்டிலும் தி க்ரே மேன் என்ற படத்தில் ரியான் ரோஸ்லிங் மற்றும் கிரிஸ் இவான் ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். இது தவிர அத்ராங்கி ரே பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தனுஷின் ரி யூனியன்:
இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் தாடி மீசை இல்லாமல் டீனேஜ் பையன் போல இளமையாக இருக்கும் தனுஷை சுற்றி நான்கு வளர்ப்பு நாய்கள் உள்ளன. இந்த புகைப்படத்தோடு ‘நீண்ட நாட்களாக காத்திருந்த ரி யூனியன். உங்களோடு இருப்பது மகிழ்ச்சியான விஷயம் பசங்களா’ எனக் கூறியுள்ளார். படப்பிடிப்பு காரணமாக வெளியூரில் இருந்த தனுஷ் இப்போது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.