"கடைசில அவன் சொன்னது மாதிரியே நடந்துடுச்சு".. மயில்சாமி பற்றி உருக்கமாக பேசிய தாமு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் சினிமா திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைபிரபலங்கள் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "Mayilu ஏன்டா சீக்கிரம் போயிட்ட?".. 39 வருஷ நட்பு.. எமோஷனல் ஆன ரமேஷ் கண்ணா..

57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி மக்களை சிரிக்க வைத்தவர். இந்த சூழ்நிலையில் அவருடைய இழப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் தாமு தனது நண்பர் மயில்சாமி குறித்து பேசுகையில்," சினிமாவிற்கு முன்னாடியே மயில்சாமியை தெரியும். மேடை கலைஞர்களாக இருந்தபோதே இருவரும் நல்ல நண்பர்கள். டப்பிங் கலைஞர்களா எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். நான் மயில்சாமியோட ரசிகன். அவர் என்னோட ரசிகன். அப்படி ஆரம்பிச்ச நட்பு திரைப்பட பயணங்களிலும் தொடர்ந்தது. அதை எல்லாம் தாண்டி அருமையான நண்பன். கள்ளங்கபடமற்ற மனசு அவனுக்கு. ஈகோ இல்லாத மனுஷன். சினிமாவுக்குள்ள ஈகோ இல்லாத கலைஞர்களை பார்க்குறது கஷ்டம்."

"அவன்கிட்ட இருக்க ஸ்பெஷாலிட்டி, சம்பாதிக்கிறத அடுத்தவங்களுக்கு கொடுத்துட்டே இருப்பான்.  அது மிகப்பெரிய கிஃப்ட். நல்லா எல்லோரையும் மனசார பாராட்டுவான். மத்தவங்களை பாராட்டுற குணம் என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்துச்சு. மகா சிவராத்திரிக்கு முன்னாடி எப்போதும் மீட் பண்ணுவோம். நான் எந்த கோவிலுக்கு போறேன், அவன் எந்த கோவிலுக்கு போறான்னு பேசிப்போம். அது இந்த தடவை மிஸ் ஆகிடுச்சு. அதை பத்தியே யோசிச்சுட்டு இருக்கேன். நான் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு போய்ட்டேன். அவன் கேளம்பாக்கம் போயிருக்கான். இன்னைக்கு மீட் பண்ணி, அனுபவங்களை பகிர்ந்துப்போம்னு இருந்தேன். கடைசில இப்படி ஆகிடுச்சு."

"ரொம்ப பெரிய சிவபக்தன். சிவனோட ஐக்கியமாகனும் அப்படிங்குற மாதிரி நெறய சொல்லுவான். கடைசில அப்படியே ஆகிடுச்சோ-னு தோணுது. பிரபஞ்சம் நம்ம சொல்றது எல்லாத்தையும் கேட்டுட்டே இருக்கும். அது நடந்துச்சோ-ன்னு தோணிட்டே இருக்கு. பள்ளிகளில் என்னோட பேச்சுகளை வந்து கேக்கணும்-னு சொல்லிட்டே இருந்தான். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. எங்களாலேயே தாங்கிக்க முடியல. அவரோட மனைவி, மகன்களை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு. தமிழ் சினிமாவுல மயில்சாமியோட இடம் யாராலும் நிரப்ப முடியாதது " என்றார்.

Also Read | "மயில்சாமியின் கடைசி வாய்ஸ்.. அப்போவே பிரச்சனை வந்திடுச்சு".. Drums சிவமணி கண்ணீர் பேட்டி..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Dhamu Emotional speech about Mayilsamy demise

People looking for online information on Dhamu, Dhamu Emotional speech about Mayilsamy demise, Mayilsamy will find this news story useful.