தமிழ் சினிமாவில் முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் டானியல் பாலாஜி. பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து வந்த டேனியல் பாலாஜி அண்மையில் தன்னுடைய தாயின் ஆசைக்காக கோயில் ஒன்றை கட்டியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழியில் நடித்துவரும் டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. வடசென்னை திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி அண்மையில் சில வாரங்களுக்கு முன்பு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான அரியவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் சென்னை ஆவடிக்கு அருகில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி இதுகுறித்த விபரங்களை தற்போது மிக பிஹைணட்வுட்ஸ் தளத்துக்கு தன் அம்மாவுடன் இணைந்து கோயிலில் இருந்தபடி, பிரத்தியேக பேட்டியில் அளித்திருக்கிறார்.
இந்த பேட்டியில் பேசிய டேனியல், “ஒருமுறை அம்மா ஒரு கூட்டு செய்திருந்தார். அவர் நன்றாக சமைப்பார். அந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கப்போய், அதை எப்படி செய்தீர்கள் என நான் அவரிடம் கேட்டேன். அவர் அந்த உணவில் இருந்த ஒவ்வொரு பொருளையும் பகுத்து என்னையே புரிந்துகொள்ளும்படி செய்தார். அவர் விளக்கவே இல்லை. நானே அதை லேயர் லேயராக புரிந்துகொண்டுவிட்டேன், அதுவே பின்னர் வேட்டையாடு விளையாடு படத்தின் ஒரு காட்சியில் மேக்கப்பிற்காக நான் பயன்படுத்திய உத்தி,. அதிக செலவு செய்ய வேண்டிய இடத்தில் 100 டாலர் மட்டுமே செலவு செய்தோம். தற்போது வெளியாகியிருக்கும் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்தில் வரும் ரயில் விபத்து காட்சியில் இன்னும் கொஞ்சம் அனுபவங்களோடு மேக்கப்பில் பணிபுரிந்தோம். அந்த காட்சிகள் சென்சாரில் கட் ஆகிவிடாதபடி அதை யோசித்து செய்தோம்” என்றார்.