கடந்த ஜூன் மாதம் பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளம் நடிகரின் மறைவால் அவரது குடும்பமும் நிலைகுலைந்து போனது.
இந்நிலையில் நடிகர் சீரஞ்சீவி சார்ஜா, மேக்னா தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்க ஆவலுடன் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் இந்த திடீர் சோகம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் தள்ளிவிட்டது. சமீபத்தில் நடிகை மேகனாவுக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது சீரஞ்சீவி சார்ஜா, மேக்னா தம்பதியினருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரது தம்பி துருவ சார்ஜா பகிர்ந்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.