செம..!! இந்திய அளவில் சாதனைப் படைத்த பிரபல நடிகரின் மகன்.! - குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரின் மகன் இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் சின்னி ஜெயந்த். ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார் இவர். மேலும் அண்மையில் இவர் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்திலும் ஒரு சிறிய காட்சியில் நடித்து கலக்கினார். இத்துடன் இவர் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். சிவில் சர்வீஸ் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் சின்னி ஜெயந்த்தின் மகன் அகில இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்துள்ளார். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 829 பேர் என்பது குறிப்படத்தக்கது. இதையடுத்து ரசிகர்களும் திரைத்துறையினரும் சின்னி ஜெயந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சாதனை | Actor Chinni Jayanth son clears Civil Service exam all india level

People looking for online information on Chinni jayanth, Chinni Jayanth Son, Civil Service Exam will find this news story useful.