2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தயாரித்த ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தற்போது பரத், வாணி போஜன், கே.எஸ் ரவிக்குமார் நடிக்கும் Production No - 12 எனும் பெயரிடப்படாத படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கவுள்ளார். திரில்லர் வகைமையில் இந்தப்படம் தயாராகிறது.
நடிகர் பரத் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ’காளிதாஸ்’ படமும் திரில்லர் வகைமையில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் சல்மான் கானுடன் ‘ராதே’ படத்தில் நடித்திருந்தார்.
வாணி போஜனும், தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’ என பிஸியாக வலம் வருகிறார்.
பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை கடந்த ஏப்ரலில் சென்னையில் நடைபெற்றது. கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு தற்போது மீண்டும் தென்காசியில் ஆரம்பமாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, திருநெல்வேலி, அம்பை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.