தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிரும் என்.டி.ஆர். மகனும், ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமானவர் நந்தமுரி பாலகிருஷ்ணா.
இவர் தான், தமிழ் - இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்தும், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா குறித்தும் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து அவை பரபரப்பாகி வருகின்றன.
61 வயதான நடிகர் பாலகிருஷ்ணா பிரபல தெலுங்கு டிவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு ஏ.ஆர்.ரஹ்மானைத் தெரியாது என்று கூறி அதிரவைத்துள்ளார். மேலும், “ஒரு தசாப்தத்தில் (பத்து வருடத்துக்கு ஒருமுறை), அவர் (ஏ.ஆர்.ரஹ்மான்) ஒரு வெற்றியைக் கொடுத்து ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்” என்று பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
இந்த கருத்தை அடுத்து #WhoisARRahman என்கிற ஹேஷ்டேக் பிரபலமானது. இதனை அடுத்து, கொதித்து எழுந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பலரும் #WhoisBalakrishna என்கிற ஹேஷ்டேகில் அவருடைய முந்தைய திரைப்படங்களின் காட்சிகள், பாடல்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அத்துடன், பாரத ரத்னா விருது குறித்து மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தையும் பாலகிருஷ்ணா அதே பேட்டியில் தெரிவித்தார். அதன்படி, பாலகிருஷ்ணா கூறும்போது, நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருது பாரத் ரத்னாவை அவரது தந்தை என்.டி.ஆரின் கால் விரல் நகத்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இந்த கருத்துக்களால் வலுவான கண்டனங்களை பலரும் பாலகிருஷ்ணா மீது முன்வைத்துள்ளனர்.
ALSO READ: இந்த 2 வகை ஆண்களில் யாரை Date பண்ணுவீங்க? - நந்திதா ஸ்வேதாவின் Hot பதில்! Video!