அனைவருக்கும் நன்றி! 'பிக்பாஸ்' எண்ட்ரி குறித்து... நடிகர் அஸீம் 'இறுதி' விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 65 நாட்களை கடந்து விட்டது. அடுத்தடுத்து எதிர்பாராத நபர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதால், வைல்டு கார்டு எண்ட்ரியாக யாராவது உள்ளே நுழைவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அஸீம் தனது பிக்பாஸ் எண்ட்ரி குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அஸீம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ''நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை. இது எனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என்மீது மிகுந்த அன்பையும், ஆதரவையும் காட்டிய அனைவருக்கும் நன்றி,'' என தெரிவித்து இருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காக அஸீம் குவாரண்டைனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Azeem's final statement on Bigg Boss Wildcard Entry

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.