இந்த கொரோனா வைரஸினால் பாதிப்பு ஒருபுறம் இருக்க, பெரும்பாலான மக்களை வீடுகளிலேயே முடக்கிபோட்டுள்ளது. நான்காவது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், நோயின் அச்சம் காரணமாக மக்கள் அத்தியாவசிய காரியங்கள் தவிர்த்து பெரும்பாலும் வெளியில் வருவதில்லை.
இதன் காரணமாக குழந்தைகள் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு திரும்பியுள்ளனர். மேலும், படப்பிடிப்புகள் இல்லாததால் பிரபலங்கள் பலரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான சேலஞ்ச் விடுத்து தங்களை சோர்வடையாமல் பார்த்துக்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் தங்கள் சிறுவயது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 'முருகா', 'புடிச்சிருக்கு', 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அசேக் தனது சிறுவயதில் ஸ்ரீகிருஷ்ணா டிவி சீரியலில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து ஃபோட்டோ வெளியிட்டுள்ளார். அதில், முதன் முதலில் கேமரா முன் தோன்றியது ஸ்ரீ கிருஷ்ணா நாடகத்தில் கிருஷ்ணாவாக நடித்தேன். தற்போது அது மீண்டும் டிடி நேஷனல் சேனலில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.