"செய்யாத தப்புக்கு தண்டனை.." - திவ்யா ஸ்ரீதரையும் குழந்தையையும் பார்க்க பயமா? - அர்ணவ் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதற்கு அடுத்தபடியாக, திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்த "மகராசி" தொடர், ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.

Advertising
>
Advertising

இந்த சீரியலில் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் பின்னர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "செவ்வந்தி" எனும் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே "செவ்வந்தி" சீரியல், பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரும், "கேளடி கண்மணி" தொடரில் தன்னுடன் இணைந்து நடித்திருந்தவருமான அர்ணவை திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை திவ்யா ஸ்ரீதர், “விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம். காதலர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக அன்புடன் இதனை பேணுவோம். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் கொடுத்த அளவில்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்னரே அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் இருவருக்குமான பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தனர். இவர்களுக்குள் சட்ட ரீதியான சிக்கல்களும் உருவாகின. இவற்றை அடுத்து, அண்மையில் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து நடிகர் அர்ணவ் பிஹைண்ட்வுட்ஸில் அளித்த பிரத்தியேக பேட்டியில், “எனக்கு குழந்தை பிறந்தது தெரியும், கேள்விப்பட்டேன். அவருக்கு வாழ்த்துக்கள் கூறினேன். அப்போது அவர் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறினார். ஆனால் நேரில் சென்று குழந்தையை பார்க்கக்கூடிய எண்ணம் யாருக்குத்தான் தோன்றாது; அந்த எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனால் நான் எதுவுமே செய்யாத போதே நான் அதைச்செய்தேன் ..இதை செய்தேன் .. என்று குற்றம் சாட்டி கொண்டிருந்தார்கள். நான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்து வந்திருக்கிறேன். இனியும் என் அப்பா அம்மா உள்ளிட்ட யாரையும் கஷ்டப்படுத்த முடியாது. அதனால் குழந்தையையோ அவரையோ (திவ்யா ஸ்ரீதர்) நேரில் சென்று பார்க்கும் பொழுது எனக்கு அச்சம் தான் ஏற்படுகிறது. என்ன உள்நோக்கத்தில் அதை செய்கிறார் என்று தெரியவில்லை. இருப்பினும் திரும்பவும் என்னை கார்னர் செய்து என் மீது பழி சுமத்தி, குற்றம் சாட்டினால் என்ன செய்வது என்கிற அச்சம் தான் அதிகரிக்கிறது.

ஏற்கனவே அவர்கள் கொடுத்த மூன்று குற்ற புகார்களில் எந்த முகாந்திரமும் இல்லை. இருப்பினும் நான் தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறேன். திரும்பவும் அப்படி நடந்தால் அனைவருக்கும் சங்கடம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arnav about his and Divya Sridhar new born baby

People looking for online information on Arnav, Divya Sridhar, Sevvanthi Divya Sridhar will find this news story useful.