கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி மக்களை பீதியடையச் செய்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செல்ஃபோனில் நாம் யாருக்கு அழைத்தாலும் கொரோனோ விழிப்புணர்வு குரல் தான் முதலில் கேட்கிறது.
இந்நிலையில் 'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்', 'டிக் டிக் டிக்' உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜூனன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'வாயை மூடி பேசவும்' பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உருவான மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் வித்தியாசமான நோய் ஒன்றினால் அனைவரும் பாதிக்கப்படுவர். இதனையடுத்து நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு குரல் போய்விடுதாக காட்டப்பட்டிருக்கும்.
இதனையடுத்து அந்த பட காட்சி ஒன்றில் துல்கர் சல்மானுக்கு இருமல் வர, அருகில் அர்ஜூனன் பயந்து அங்கிருந்து கிளம்ப எத்தனிப்பார். தற்போதைய சூழலுக்கு இந்த காட்சி சரியாக பொருந்தி வருவதாக அர்ஜூனன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், இது விசித்திரமானது என கமெண்ட் செய்துள்ளார்.