அந்த முன்னணி ஹீரோவுக்கு., கொரோனா வைரஸ் உறுதி.. 'பிரபல நட்சத்திரங்கள் எமோஷனல்.!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோ தனக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருப்பது குறித்து பதிவிட்டுள்ளார். 

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் அர்ஜுன் கபூர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான இவர் Ishaqzaade, Half girlfriend, 2 States உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு திரைத்துறை விருதுகளையும் வென்றுள்ளார். 

இந்நிலையில் தற்போது அர்ஜுன் கபூர் ஒரு முக்கிய தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''உங்களுக்கு இந்த தகவலை சொல்ல வேண்டியது என் கடமை. எனக்கு கொரோனா வைரஸ் டெஸ்டில் பாசிட்டீவ் என வந்துள்ளது. இப்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். சீக்கிரமே இதிலிருந்து மீண்டு வருவேன்'' என அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான, ஹிருதிக் ரோஷன், சோனம் கபூர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் அவர் சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என எமோஷனல் கமன்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். 

 

அர்ஜுன் கபூருக்கு கொரோனா வைரஸ் | Actor Arjun Kapoor tested for COVID turns stars shock

People looking for online information on Arjun Kapoor, COVID positive will find this news story useful.