பிரபல நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸிற்கு கொரோனா பாதிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதித்து வருவது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்பிபி தனக்கு கொரோனா பாதித்துள்ளது குறித்து உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் திருவாடானை எம்.எல்.ஏவுமான கருணாஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம். முன்னதாக அவரது பாதுகாவலருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கருணாஸிற்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது அவர் தனது திண்டுக்கல் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளாராம். இந்த செய்தி மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் நலம் பெற வேண்டி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor and MLA Karunas tested positive for coronavirus | எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸிற்கு கொரோனா பாதிப்பு

People looking for online information on Coronavirus, Covid-19, Karunas will find this news story useful.