பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் - வெளியான ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மலையாள இயக்குநர் பரதன் மற்றும் நடிகை கேபிஏசி லலிதா ஆகியோரின் மகனும் பிரபல இயக்குநருமான சித்தார்த் பரதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.

தனது மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் மகளும் தாயும் நலமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

'நம்மல்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சித்தார்த் பரதன், 'சந்திரேட்டன் எவிடேயா' போன்ற படங்களை இயக்கவும் செய்துள்ளார். கடந்த வருடம் இவருக்கும் சுஜினா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Actor and Director Sidharth Bharathan shares her daughter's photo went viral | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல இயக்குநர் மற்றும் நடிகர்

People looking for online information on Sidharth Bharathan will find this news story useful.