செம ஸ்டைலிஷான லுக்கில் இருக்கும் இந்த நடிகர் யார்னு தெரியுதா ? - வைரலாகும் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

80களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநரும் நடிகருமான மனோபாலா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'ஊர் காவலன்' உள்ளிட்ட ஏராளமான படங்களை அவர் இயக்கியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் 'சதுரங்கவேட்டை', 'பாம்பு சட்டை' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், இளம் நடிகரை போல, செம ஸ்டைலிஷாக உடையணிந்து காட்சியளிக்கிறார். இதனையடுத்து அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. புகைப்படங்களில் ஆளே அடையாளம் தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Manobala

Actor and director Manobala's Stylish looks pics goes Viral | செம ஸ்டைலிஷாக இருக்கும் நடிகர் மனோபாலாவின் புகைப்படங்கள் வைரல்

People looking for online information on Manobala will find this news story useful.