நடிகர் அஜித்குமாரின் வாட்ஸ்அப் DP.. வெளியான VINTAGE போட்டோ.. அந்த நாள் ஞாபகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித் குமார் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார்.

Actor AK Ajith Kumar WhatsApp DP Vintage Image Released
Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor AK Ajith Kumar WhatsApp DP Vintage Image Released

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்று வரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் பிக்பாஸ் பிரபலம் அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித் உடனான கலந்துரையாடலை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் முகப்பு படம் வெளியாகி உள்ளது.

கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்ட போது போட்டி துவங்கும் முன் கடவுளை வழிபடும் வகையில் இந்த வின்டேஜ் புகைப்படம் அமைந்துள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor AK Ajith Kumar WhatsApp DP Vintage Image Released

People looking for online information on Ajith Kumar, AK, Thunivu will find this news story useful.