நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியமின் இறுதி ஊர்வல காட்சிகள் வெளியாகி உள்ளன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | நடிகர் அஜித் தந்தை மறைவு.. இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி அஞ்சலி மற்றும் ஊர்வல காட்சிகள் வெளியாகி உள்ளன. பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு அவரது உடல் நடிகர் அஜித் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் இந்த வீடியோவில் நடிகர் அஜித் குமார் குடும்பத்தினர் மற்றும் அவருடைய சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காணப்படுகின்றனர். மலர் மாலை அணிவித்து, தென்னை ஓலை மீது உடல் வைக்கப்பட்டு மரியாதையுடன் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
Also Read | "தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வு".. உருக்கமான அறிக்கை வெளியிட்ட அஜித்குமார் & சகோதரர்கள்..!