AK 61 கெட்டப்பில் அஜித்.. மங்காத்தா தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு.. செம்ம டிரெண்டாகும் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

Advertising
>
Advertising

வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

AK61 படத்தின் பூஜை ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித், ஷாலினி, அனோஸ்கா குமார் ஆகியோருடன் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி & அனுஷா தயாநிதி சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை தங்களது டிவிட்டர் பக்கத்தில் தயாநிதி & அனுஷா வெளியிட்டுள்ளனர்.

அஜித்தின் 50 வது படமாக  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம் ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் ’மங்காத்தா’.

கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிட்டது. இந்த படத்தில் அஜித் வில்லனாக நடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இந்த படம் டிரெண்ட் செட்டர் ஆனது. வசூலிலும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar Family Meet Mankatha Producer

People looking for online information on Ajith Kumar, AK61, Cloud9, Dayanidhi, H Vinoth, Mankatha, Shalini will find this news story useful.