செமயான புது லுக்கில் ஏர்போர்ட்டை கலக்கிய நடிகர் அஜித்.. ரசிகர்களுடன் எடுத்த ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் புதிய லுக் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 'BLOCKBUSTER'.. துணிவு படத்தின் மிரட்டலான மேக்கிங் BTS வீடியோ.. தீய்யா இருக்கு!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும்  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடங்கும் என  நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.  மேலும் நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் குமாரின் தோற்றம் ஆரம்பம், வீரம் படங்களில் உள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | வசூலை வாரிக் குவிக்கும் 'வாரிசு'.. பிரிட்டனில் மட்டும் இத்தனை கோடி வசூலா? மாஸ்

செமயான புது லுக்கில் ஏர்போர்ட்டை கலக்கிய நடிகர் அஜித்.. ரசிகர்களுடன் எடுத்த ஃபோட்டோஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar AK New Look went viral on social media

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar New Look will find this news story useful.