BREAKING: வலிமை-க்கு பின் அஜித்குமார் - H வினோத் இணையும் #AK61 படத்தின் ஷூட்டிங் எப்போ? வேற மாரி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அஜித் - எச் வினோத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட் கிடைத்துள்ளது.

Actor Ajith and H Vinoth next AK61 Shooting starts from March
Advertising
>
Advertising

நெகிழ வைக்கும் நடிகர் கார்த்தி! 10 ரூபாய்க்கு வயிறார சாப்பாடு

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.  NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

Actor Ajith and H Vinoth next AK61 Shooting starts from March

'வலிமை' படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. கொரோனா காரணமாக திரையரங்கில் 50% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதால் படத்தின் வெளியீடு பொங்கலில் இருந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.  பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த வலிமை படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.

இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது பற்றிய மிக முக்கிய அப்டேட் பிரத்யேகமாக Behindwoods தளத்திற்கு கிடைத்துள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்காக படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்களை இறுதிச்செய்யும் பணியில் இருப்பதாக  நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பணிபுரியும் படக்குழு மற்றும் படம் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம்.

அப்போ லிப் கிஸ்.. இப்போ கர்ப்பமா? அடுத்தடுத்து ட்ரெண்ட் ஆகும் 'பிரேமம்' ஹீரோயின்‌..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith and H Vinoth next AK61 Shooting starts from March

People looking for online information on Ajith, Ajith Kumar, AK, AK61, H Vinoth, Valimai will find this news story useful.