மீண்டும் 'நடிக்க' வருவேனா?... நடிகர் அப்பாஸ் EXCLUSIVE பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1996-ம் ஆண்டு காதல் தேசம் படத்தில் அறிமுகமான அப்பாஸ் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் 2016-ம் ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் நமது Behindwoods சேனலுக்கு அப்பாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தன்னுடைய முதல் படம் காதல் தேசம் தொடங்கி நடிப்புக்கு பிரேக் விட்டது வரை பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர். அப்பாஸ் தற்போது தன்னுடைய குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசித்து வருகிறார்.

மீண்டும் 'நடிக்க' வருவேனா?... நடிகர் அப்பாஸ் EXCLUSIVE பேட்டி! வீடியோ

Tags : Abbas

Actor Abbas talks about his First Movie Kadhal Desam

People looking for online information on Abbas will find this news story useful.